திருவனந்தபுரம்: நவ 30-
சபரிமலையில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த வருடத்தை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஒருசில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தையும் தாண்டியது.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வண்டிப்பெரியார், எருமேலி மற்றும் பம்பை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்களில் முன்பதிவு செய்து தரிசனம் செய்கின்றனர்.
கடந்த இரு வாரங்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தையும் தாண்டி விட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.