சரஸ்வதி தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி கோலாலும்பூர் தலைமையாசிரியரின் பணி ஓய்வுபெற்றார்!

பெட்டாலிங் ஜெயா நவ 30-
கடந்த 6 ஆண்டுகளாக பெட்டாலிங் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்த ஆசிரியை திருமதி சீத்தா த/பெ தங்கவேலு அவர்களின் பணி ஓய்வு விழாவை மிகச் சிறப்பாக பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரிய குழுவினர்,ஆசிரியர்கள், பெற்றோர்கள் , ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆசிரியை திருமதி விமலா தியாகராஜூ தலைமையில் , பள்ளி துணைதலைமையாசிர்களின் வழிக்காட்டலுடனும் மற்ற ஆசிரியர்களின் துணையுடனும், பள்ளி வாரியக் குழு & பெற்றொர் ஆசிரியர் சங்கத்தின் வற்றாத ஆதரவுடனும் இந்நிகழ்வு மிகவும் கோலாகலமாக பள்ளியிலும் MTree Hotel Puchongயிலும் பின் நடைப்பெற்றது.

மேளதாளம் நாதஸ்வரம் இசையுடனும் SMK Petaling மாணவர்களின் kompang இசையுடனும் அவரின் பணி ஓய்வு நிகழ்வு தொடங்கியது.

இந்நிகழ்வுக்கு கூட்டரசு வளாக கல்வி இலாக்காவின் பாலர்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்விகளின் துணை இயக்குனர் திருமதி இராஜேஸ்வரி கருப்பையா ,பங்சார், புடு மாவட்ட கல்வி இலாக்காவின் அறிவியில் & கணிதப் பாடத்தின் பொறுப்பாளர் திரு.குமார் சுப்ரமணியம் (SICC+ Science & Mathematics) , கூட்டரசு வளாக தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு ஜெகதீஸ்வரன் அவர்தம் உறுப்பினர்கள், பள்ளி வாரியத் தலைவர் திரு ஜக்சன் அவர்தம் உறுப்பினர்கள், பெட்டாலிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஆலோசகர் திரு.ஆனந்த கிருஷ்ணன் இணைந்து பயின்ற தோழர்கள், சேவையாற்றிய பிற பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் இன்னாள் மாணவர்கள் , பெற்றோர்கள் என பலர் பள்ளிக்கு வருகைப் புரிந்திருந்தனர்.

YB Ahmad Fahmi Fadzil ,தொடர்பு துறை அமைச்சர் நேரடியாக வர இயலாத்தால் தலைமையாசிரியருக்கு பழக்கூடை அனுப்பி தம் வாழ்த்துகளைத் தெரிவித்துக். கொண்டார்.

திருமதி சீத்தா அவர்கள் கடந்த 01. 12.1964யில் ஆறு உடன்பிறப்புகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர். கடந்த 35 ஆண்டுகளாக அவர் தமிழ்ப்பள்ளிக்கு சிறந்த சேவையாற்றி வந்துள்ளார்.

கல்வி வரலாறு:
SJKT KHIR JOHARI (ஆண்டு 1-ஆண்டு 6)
SMK DATO PANGLIMA PERANG KIRI (படிவம் 1-படிவம் 3)
SMK HAMID KHAN (படிவம் 4-படிவம் 5)
MAKTAB PERGURUAN LEMBAH PANTAI (DIPLOMA PERGURUAN -PENGAJIAN TAMIL)

சேவை வரலாறு:
01-12.1989 -31.07.2011
சரஸ்வதி தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி,கோலாலும்பூரில் ஒரு சாதரண ஆசிரியராக சேவையைத் தொடங்கினார்.

அவர் இப்பள்ளியிலேயெ அறிவியல் பாட பணிக்குழு தலைவராகவும், புறப்பாட துணை தலைமையாசிரியராகவும், பாடப் பணிக்குழு தலைமையாசிரியராகவும் சேவை செய்தார்.

பின்னர்
01.08.2011 முதல் 13.02.2018
வரை புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று 7 ஆண்டுகள் அறிய பல சேவைகள் ஆற்றினார்.

89 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 289ஆக உயர்த்த அரும்பாடுபட்டார்.

பள்ளியின் புதிய கட்டத்திற்கும் உருமாற்றுத் தமிழ்ப்பள்ளியாக உருவாகவும் பல திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றியும் பெற்றார்.

பின்னர் 14.02.2018 முதல் 30.11.2024
சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தலைமையாசிரியராக வந்தார்.

இவர் இப்பள்ளியில் பல சேவைகளை ஆற்றியுள்ளார். பள்ளிக்கு புதிய 2 அடுக்குமாடி கட்டடம் கட்டிடவும், மாணவர்களுக்கு நவீன புதிய கழிவரை உருவாக்கவும் , ஆசிரியகளுக்கு வசதியான உணவு உண்ணும் இடத்தை உருவாக்கவும், மாணவர்கள் இளைப்பார Laman Minda Sihat & S3R Garden எனும் இடங்களை உருவாக்கவும், சிற்றுண்டி சாலையை மேம்படுத்தவும், புதிய கணினி அறை & நூலகம் உருவாக்கவும் பள்ளி வாரிய குழுவுடனும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு கணவை நினைவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles