

கோலாலம்பூர் டிச 2-
இன்று தேசிய ம இகா விளையாட்டுப் பிரிவு பொறுப்பாளர்கள் ம இகா மகளிர் அணி தலைவி மாண்புமிகு சரஸ்வதி மற்றும் தேசிய மகளிர் பிரிவுடன் முக்கிய சந்திப்பு கூட்டத்தை நடத்தியது.
‘WalkathonTSV 2024 போட்டி ஏற்பாடு நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்து பேசப்பட்டதாக ம இகா தேசிய உச்சமன்ற உறுப்பினர் மற்றும் ம இகா விளையாட்டுப் பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
சிலாங்கூரில் உள்ள கோத்தா கெமுனிங்கில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அன்று நடைபெறும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு தேசிய மஇகா மகளிர்களுக்கு நல்வாழ்த்துக்கள் என்று ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.