உள்கட்டமைப்புக்கு 70%- கல்விப் பணிகளுக்கு 30%- தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் பகிர்ந்தளிப்பு: பாப்பராய்டு அறிவிப்பு

ஷா ஆலம், டிச 3-
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள மானியத்தில் 70 விழுக்காடு பள்ளி மேலாளர்
வாரியத்திற்கும் 30 விழுக்காடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும்
பகிர்ந்தளிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.
பாப்பராராய்டு தெரிவித்தார்.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு ஒதுக்கப்படும் 30 விழுக்காட்டுத்
தொகை ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம்,
பொறியியல் மற்றும் கணித பாடத் திட்டம் மற்றும் திவேட் (TVET)
எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் கல்வி நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளையில், பள்ளி மேலாளர் வாரியத்திற்கு வழங்கப்படும் 70
விழுக்காட்டுத் தொகை கட்டிட சீரமைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு
மேம்பாட்டிற்கு செலவிடப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மாநில அரசு வழங்கும் நிதியை பள்ளி மேலாளர் வாரியமும் பெற்றோர்
ஆசிரியர் சங்கமும் தங்கள் வங்கி கணக்கில் சேமிப்பாக வைக்கக் கூடாது
என்பதோடு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறும் பள்ளிகளின் மானிய
விண்ணப்பங்கள் அடுத்தாண்டு பரிசீலிக்கப்படாது என்றும் அவர்
தெளிவுபடுத்தினார்.

இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பாப்பாராய்டு
மேலும் கூறியதாவது.

2024 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில அரசு பள்ளிகளுக்கு
வழங்கும் உதவி திட்டத்தில், தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் குறித்து சில
முக்கியத் தகவல்களை வழங்கவுள்ளேன்.

நீங்கள் யாவரும் அறிந்தபடி, இந்தத் திட்டத்தின்
நிதி இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு வழங்கும் இந்த நிதியில்
30% நிதி ஸ்டெம் மற்றும் திவேட் தொடர்பான கல்வித்திட்டங்களை
மேற்கொள்வதற்கும்

  • 70% நிதி பள்ளிக் கட்டிடங்களைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கும்
    ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் இந்த நிதி நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும்
குழப்பங்களைத் தவிர்க்கவும் எளிமைப்படுத்தவும், பின்வரும் வழிமுறைகளை அறிவிக்க
விரும்புகிறேன்.

  1. எந்ததந்தப் பள்ளிகளில் பள்ளி மேலாளர் வாரியம் (LPS) உள்ளதோ, அப்பள்ளிகளின்
    பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG) தாங்கள் பெற்ற நிதியில் 70 விழுக்காட்டை பள்ளி
    மேலாளர் வாரிய (LPS) கணக்கில் செலுத்த வேண்டும்.

பள்ளி மேலாளர் வாரியம் (LPS)
பள்ளிக் கட்டிடங்ளைச் சீரமைக்கும் பணிகளை முழுமையாக நிர்வகிக்கும்
பொறுப்பில் இருக்கும்.

எஞ்சிய 30% விழுக்காடு நிதியின் வாயிலாக பெற்றோர்
ஆசிரியர் சங்கம் ஸ்டெம் (STEM) மற்றும் TVET தொடர்பான கல்வித்திட்டங்களை
மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

  1. மேலாளர் வாரியம் (LPS) இல்லாத பள்ளிகளில் மாநில அரசு வழங்கும் முழு
    மானியத்தையும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG) நிர்வகிக்க வேண்டும்.

பள்ளி
நிகழ்ச்சிகள் மற்றும் கட்டிட மேம்பாடுகள் இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பை
பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • நிதி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, பணிகள் அல்லது
    நடவடிக்கைகள் யாவும் நிறைவு பெற்றப் பின் இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட
    வேண்டும். பள்ளிக் கட்டிடங்கள் சீரமைப்பு குறித்த அறிக்கையினை பள்ளி மேலாளர்
    வாரியமும் STEM மற்றும் TVET தொடர்பான கல்வித் திட்டங்களை மேம்படுத்திய
    பணிக்கான அறிக்கையை பெற்றோர் ஆசிரியர் சங்கமும் அனுப்ப
    வேண்டும்.

மேலும், பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதி முழுவதும் மேற்குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு
முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி
மேலாளர் வாரியமும் தங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்புத் தொகையாக இந்த
நிதியை வைக்கக் கூடாது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

மேற்குறிப்பிட்ட வழி முறைகளை கடைபிடிக்காத பள்ளிகள், அடுத்த ஆண்டின்
நிதி விண்ணப்பத்திற்கு தகுதி பெறாது என்பதையும் இங்கு குறிப்பிட
விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles