
கோலாலம்பூர், டிச. 3 – தீபகற்ப மலேசியாவின் கிழக்கில் டிசம்பர் 8 முதல் 14 வரை பரவலாக பருவமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்று அத்துறை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய வானிலை மாதிரிகளின் ஆய்வுகளின் அடிப்படையில் இன்று செவ்வாய் மாலை (3 டிசம்பர்) முதல் புதன்கிழமை அதிகாலை (4 டிசம்பர்) வரை கிளந்தான் மற்றும் திரங்கானுவில் காற்றுக் குவியம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்காலகட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தையும் வானிலை ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தையும் வலம் வரும் அதே வேளையில் சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியைப் பதிவிறக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெர்னாமா

