காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் டிச 3-
மீபா ஏற்பாட்டில் வரும் டிசம்பர் 7,8 ஆம் தேதிகளில் பினாங்கு யூஎஸ்எம் அறிவியல் பல்கலைக்கழக கோப்பா அரினா திடலில் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டிக்கு ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் விக்னேஸ்வரன் ஒரு லட்சம் வெள்ளி மானியம் வழங்கி இருப்பதாக ம இகா விளையாட்டுப் பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 40 தமிழ்ப் பள்ளிகளும் பெண்கள் பிரிவில் 40 தமிழ்ப் பள்ளி குழுக்களும் பங்கேற்கிறது.
இந்த போட்டிக்கு எம்ஐஇடி மற்றும் பெர்ஜெயா குருப் ஆதரவை வழங்கி உள்ளது.
மேலும் ம இகா சார்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு லட்சம் வெள்ளியை வழங்கி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
டிசம்பர் 7 ஆம் தேதி இந்த போட்டியை ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
இந்த போட்டியை காண ஆறாயிரம் பேர் வருகை புரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எழுச்சிக்கு எப்போதும் ம இகா அரணாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
எம்ஐஇடி மூலம் மஇகா ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியை வழங்கி பேருதவி புரிந்துள்ளது.
அந்த வகையில் ம இகா எப்போதும் இந்திய சமுதாயத்திற்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கு தூணாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
மீபா – ம இகா விளையாட்டுப் பிரிவு ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ம இகா உச்சமன்ற உறுப்பினருமான ஆண்ட்ரு டேவிட் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீபா தலைவர் அன்பானந்தன், மலேசிய சிலம்பம் கழகத் தலைவர் டாக்டர் சுரேஸ், மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ பதி உட்பட ம இகா விளையாட்டுப் பிரிவு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.