பெட்டாலிங் ஜெயா, டிச 6 – தங்களுக்கு எதிரான குழந்தைப் புறக்கணிப்பு குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யக் கோரி மறைந்த சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதினின் பெற்றோர் தாக்கல் செய்த சமர்ப்பித்த மனுவை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (ஏஜிசி) நிராகரித்துள்ளது.
இந்த முடிவு குறித்து ரய்யானின் பெற்றோர்களான ஜைம் இக்வான் ஜஹாரி மற்றும் இஸ்மானிரா அப்துல் மனாஃப் ஆகியோரின் வழக்கறிஞர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக துணை அரசு வழக்கறிஞர் ராஜா ஜைய்சுல் ஃபரிடா ராஜா ஜஹாருடின் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டாக்டர் சியாலிசா வார்னோவிடம் தெரிவித்தார்.
இந்த மனு மீது முடிவெடுக்க இன்று தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முந்தைய வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். இந்த மறு நிராகரிக்கப்பட்டது என்று இன்றைய விராணையின் போது ராஜா ஜைசுல் ஃபரிடா கூறினார்.
கடந்த 2023அம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மதியம் மற்றும் டிசம்பர் 6ஆம் தேதி இரவு 9.55 மணிக்கும் இடையே பி.ஜே.யு. டாமன்சாரா டாமாய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆட்டிஸம் குறைபாடு கொண்ட ஆறு வயது சிறுவனான ரய்யானை புறக்கணித்ததாக 29 வயதான ஜைம் இக்வான் மற்றும் இஸ்மானிரா ஆகிய இருவர் மீதும் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவ்வாண்டு ஜூன் 13 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.
2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31 (1) (ஏ) பிரிவு, அதே சட்டத்தின் பிரிவு 31 (1) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 இன் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டுக்கும் விதிக்கப்படலாம்.
Bernama