ஷா ஆலம், டிச. 6 – அந்நியத் தொழிலாளர்களைச் பெரிதும் சார்ந்திருக்கும்
பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்று பேங்க் நெகாரா
முன்னாள் கவர்னர் டான்ஸ்ரீ முகமது இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
உற்பத்தி, கட்டுமானம் மற்றும் தோட்டத் தொழில் உள்ளிட்ட துறைகளின்
வாயிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நியத் தொழிலாளர்கள்
பங்களிப்பை வழங்கிய போதிலும் அவர்களை பெரிதும் சார்ந்திருக்கும்
போக்கு விரிவான விளைவுகளையும் கொண்டுள்ளது என்று அவர்
சொன்னார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் சார்ந்திருப்பது உற்பத்தித்
திறனை தேக்கமடையச் செய்வதோடு குறைந்த திறன் கொண்ட
தெழிலாளர்களுக்கான வாய்ப்புகள் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்
துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்காமல் போகும் சாத்தியத்தையும்
கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
உயர் வருமானம் கொண்ட நாடாக உருவாகும் மலேசியாவின்
முயற்சிக்கு இது தடையாக உள்ளது.
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும்
பணத்தின் அளவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. வெளிநாட்டுத்
தொழிலாளர்கள் அதிகப் பணத்தை தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்புவது
பணம் செலுத்தும் முறையில் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது.
நாட்டிலிருந்து வெளியேறும் தொகையின் மதிப்பு 4,000 கோடி வெள்ளி என
மதிப்பிடப்படுகிறது.
அந்தப் பணத்தை உள்நாட்டிலேயே முதலீடு செய்தால்
நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த முடியும் என்று அவர்
அவர் கூறினார்.
Bernama