பினாங்கு, டிச 6-
தங்கரதம் வாங்கப்பட்டது தொடர்பாக பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் மற்றும் இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி எம்ஏசிசிக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினார்.
தம் தலைவராக இருந்தபோது பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தங்கரதம் வாங்கியது தொடர்பில் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது தொடர்ந்து அவர் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
பினாங்கு ஜோர்ஜ் டவுனில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்துக்கு வந்த அவர் அதிகாரிகளை சந்தித்த பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
ஆச்சே அரசின் அமைதி விருது பெறுவதற்கு அவர் விமான நிலையம் சென்றபோது வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
எம்ஏசிசி விசாரணையில் அவரின் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதால் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்று விளக்கம் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் நேற்று எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் டத்தோ இராமச்சந்திரன் விசாரணைக்காக ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.