KISL, Clover Infotech இரு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம்; மலேசியாவில் வங்கி, நிதி நிறுவனங்கள் வளர்ச்சிக்கு புதிய மாற்றத்தை கொண்டு வரும்! :-KISL நிறுவன தலைவர் சண்முக கணேஷ்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் டிச 6-
மலேசியாவின் கேஐஎஸ்எல் நிறுவனத்துடன் இந்தியாவின் க்ளோவர் இன்ஃபோடெக் நிறுவனம் நேற்று வர்த்தக தொழில்நுட்பம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தொழில்நுட்பம் மற்றும் மலேசியாவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வளர்ச்சிக்கு பெரிய மாற்றத்தை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியாவின் கேஐஎஸ்எல் நிறுவனத்தின் தலைவர் சண்முக கணேஷ் இதனை தெரிவித்தார்.

கேஐஎஸ்எல் நிறுவனத்தின் கடந்த 24 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப துறையில் ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேஐஎஸ்எல் நிறுவனத்தின் வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லாக இந்தியாவின் க்ளோவர் இன்ஃபோடெக் நிறுவனம் இணைந்து உள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் குணால் நாகர்த்தி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Drive innovation, Moderate banking technology,
Delivery service excellent, Enable future ready banking , ensure regulatory compliance போன்றவை இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ஆகும்.

இந்திய வங்கித் துறையில் ஓராக்கல் ஏஐ உட்பட பல தொழில்நுட்பங்களை க்ளோவர் இன்ஃபோடெக் நிறுவனம் புகுத்தியுள்ளது.

தொழில் நுட்ப உருமாற்றத்தை மலேசிய வங்கிகளில் கொண்டு வருவதே இந்த ஒப்பந்தத்தின் முதன்மை முக்கிய நோக்கம் என்றார் சண்முக கணேஷ்.

வங்கி துறை மட்டும் இல்லாது நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவங்கள், சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இந்த தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யப்ப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles