அயலகத் தமிழர் தினம் – வேர் தேடிய விழுதுகள் போல் உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!!

காளிதாஸ் சுப்ரமணியம்

சென்னை,ஜன11:

வேர்களை தேடும் விழுதுகள் போலவும் தாயை தேடும் சேய் போலவும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் சான்றுதான் அயலகத் தமிழர் தினம் என்று பெருமிதமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு உலகத் தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாய் உருவாக்குவதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் இலக்கு.இதுவே திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவம் என்றும் அவர் மேலும் கூறினார்.

நான்காவது ஆண்டாக நடைபெறும் அயலகத் தமிழர் நாளை தலைமையேற்று தொடக்கி வைக்கையில் அவர் இதனை விவரித்தார்.

இவ்வாண்டு “எத்திசையும் தமிழணங்கே” என்னும் கருப்பொருளோடு நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழின் சிறப்பையும் அதன் தொன்மையையும் எசுத்துரைத்த உதியநிதி தமிழ்நாடு அரசு உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கவும் அவர்களுக்கு ஓர் அரணாகவும் திகழ வேண்டும் என்பதற்காகவே அயல்கத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறையை அமைத்து திறன்பட இயங்கி வருவதாகவும் அத்துறையும் தனித்துவமாய் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

உலகத் தமிழர்களை வரவேற்க்க தமிழ்நாடு அரசு எப்பவுமே தயாராகவே இருப்பதாகவும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் பாணியில் உலகத் தமிழர்களை மொழியாலும்,இனத்தாலும்,பண்பாட்டாலும்,எழுத்தாளும் ஒன்றிணைக்கும் பெரும் பணியையும் கடமையையும் தமிழ்நாடு அரசு கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த ஆக்கப்பூர்வமான திட்டம் அதன் இலக்கை எட்டும் வகையில் இதுவரை சுமார் 76 ஆயிரம் தமிழர்கள் உறுப்பினராக பதிந்திருபதாகவும் நினைவுக்கூர்ந்த உதயநிதி தமிழ்நாடு உலகத் தமிழர்களின் கல்வி,வாழ்வியல்,மொழி,இனம்,பண்பாடு உட்பட எல்லா நிலைகளுக்கும் தாயகமாகவே திகழும் என்றும் உறுதி அளித்தார்.

அதேவேளையில்,தமிழ்நாட்டில் இருக்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் உலகத் தமிழர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் உலகத் தமிழர்களின் அடையாளமாகவும் அரணாகவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு திராவிட மாடல் அரசு திகழும் என்று பெருமையோடு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles