15 மாத காசா போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தம்: உறுதிப்படுத்தினார் பைடன்!

வாஷிங்டன்: பிணைக்கைதிகளை விடுவிப்பதன் மூலம் காசாவில் 6 வார போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து துவங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வந்தது. காசாவில் 46,000 பேர் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் கடந்த சில மாதங்களாக முயற்சித்து வந்தன.காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த ஹமாஸ் – இஸ்ரேல் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

reuters

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles