
லண்டன்: ஜன 16-
பாலஸ்தீனியர்கள், காசா பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதில் மலேசியாவும் இங்கிலாந்தும் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடனான சந்திப்பின் போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
பாலஸ்தீனியர்கள், காசா பிரச்சினைக்கு இரு நாடுகள் தீர்வை அடைவதற்கான இறுதி தீர்மானம் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
அதே வேளையில் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். விரைவில் ஒரு தீர்வைப் பெறுவதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
அதிகாரப்பூர்வ குறுகிய கால பயணம் மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இங்கிலாந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா