
ஜனவரி மாதத்தை தமிழ் மொழி பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகமானது.
பொங்கல் பண்டிகையையொட்டி இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 எம்.பி.க்கள் இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், பல்வேறு மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்களின் தளமாக அமெரிக்கா உள்ளது. ஆகையால் தமிழ் மொழியின் பாரம்பரியத்தை உலகம் முழுவதும் கௌரவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு பெருமைப்படுகிறேன்.
இந்தத் தீர்மானம் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளி அமெரிக்கர்களின் வளமை, தனித்துவமான கலாசாரம், வியக்கத்தக்க சாதனைகள் மீது ஒளி வீசும் என்றார். இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.