
ஈப்போ, ஜன.17-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தம்புன் நாடாளுமன்ற சிறப்பு உயர் அதிகாரி சுரேஸ் குமார் இராமச்சந்திரன் நெகிரி செம்பிலானின் டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
பிகேஆர் கட்சியில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அபிமானத்தையும் நம்பிக்கையும் பெற்றவர்.
இவர் பிரதமர் மறுமலர்ச்சி போராட்ட பயணத்தில் தொடர்ந்து பங்கேற்றவர் என்றால் மிகையாகாது. பேராக்கில் முதல் முறையாக கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் தம்புன் நாடாளுமன்றத்தில் பிரதமர் போட்டியிட்டு வெற்றி பெற்றது வரலாற்று பதிவாகும்.
இதனை தொடர்ந்து தம்புன் நாடாளுமன்ற உயர் அதிகாரியாக பிரதமரால் ஆர்.சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டவர்.
அன்று முதல் தம்புன் நாடாளுமன்றத்தில் மிகச்சிறந்த சேவையினை வழங்கி வருகிறார்.
குறிப்பாக இங்குள்ள இந்திய சமுதயாத்தின் உடமைகளான 5 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கு மற்றும் இந்திய இயக்கங்கள் மற்றும் இந்திய கிராமங்களுக்கு வற்றாத உதவிகள் செய்து வரும் மனிதநேய பண்பாளராவார்.
இவர் தம் சேவைகளை திறம்பட இந்த தம்புன் தொகுதியில் செய்து வருவதை பிரதமரும் பாராட்டி வருகிறார்.
பிரதமரின் அனுமதி மற்றும் ஆதரவுடன் மக்கள் தேவைகளை அறிந்து அதனை சிறப்பாக தீர்வு கண்டு வருகிறார். கேட்பவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உதவிடும் மனிதநேய பண்பாளர். நேரடியாக எந்தவொரு விவகாரத்தை அணுகி அதனை தீர்க்க முடியுமா இல்லையா என்று கூறும் நல்ல மனிதராவார்.
மக்களிடம் மரியாதையாகவும் சிறந்த மனிதநேய பண்பாளராகவும் நடந்து கொள்வதில் தனித்தன்மை இவரது சிறப்புகளில் ஒன்றாகும்.
இவரின் மக்கள் சேவை மற்றும் பிரதமருக்கு விசுவாசமாகவும் பயணித்து வருகிறார். இவருக்கு மேலும் பல பல உயர் சிறப்பு விருதுகள் கிடைக்க வேண்டும்.
இவருக்கு டத்தோ விருது கிடைக்கப்பெற உதவிய பிரமருக்கு தம்புன் தொகுதி மக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.