
கோலாலம்பூர் ஜன 17-
மலேசியாவில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என்று உரிமைக் கட்சியின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவில் குறைந்தது 20 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
மலேசிய திருநாட்டை சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார கட்டமைப்பை உருவாக்கியதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது.
பல்வேறுபட்ட இனம், மொழி, மதம், கலாசாரம் கொண்டுள்ள நம் நாட்டில் ஓவ்வொரு இனமும் அவர்களின் மொழி மற்றும் பண்பாட்டை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
கனடா, லண்டன்,ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அந்த நாட்டு அரசுகள் அறிவித்திருக்கின்றன.
அதை போல் மலேசிய மண்ணில் 200 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட தமிழர்களை போற்றும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக மலேசிய அரசு அறிவிக்க வேண்டும்.
என்று கணேசன் கேட்டுக் கொண்டார்.
இந்த தருணத்தில் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு அனைத்து தமிழர்களுக்கும் தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.