
சுங்கைபட்டானி ஜன 20-
இவ்வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான பத்து டூவா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் பதிவை கெடா மாநில பதிவு இலாக ரத்து செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சுங்கைபட்டாணி வட்டார இந்தியர்களும் மகா மாரியம்மன் ஆலய பக்தர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கெடா மாநில பதிவு இலாகா பத்து டூவா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்திற்கு காரணம் கோரும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அந்தக் காரணம் கோரும் கடிதத்திற்கு எந்தப் பதிலையும் ஆலய நிர்வாகம் செவி சாய்க்காமல் இருந்து உள்ளது.
மறுபரிசீலனைக் கோரி எந்தப் பதிலையும் ஆலய நிர்வாகம் பதிவு இலாகாவிடம் கேட்டுக் கொள்ளாததால் பத்து டூவா மகா மாரியம்மன் ஆலயத்தின் பதிவை 31.12.2024 தேதி முதல் ரத்துச் செய்வதாக கெடா மாநில சங்கப் பதிவு இலாகா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனிடையே நாகேந்திரன் முத்தையா தலைமையில் இடைக்கால நிர்வாகத்தை அமைத்து இச்சம்பவம் தொடர்பாக கெடா மாநில சங்கப் பதிவு இலாகாவினரை சந்திக்க இருப்பதாக நாகேந்திரன் தெரிவித்தார்.
பத்து டூவா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் 5ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் திரளாக திரண்டு அம்மனை தரிசித்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.