
லெம்பா பந்தாய், ஜன 21: லெம்பா பந்தாய் நாடாளுமன்ற அளவில் பொங்கள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமார் 50 இந்திய குடும்பங்கள் சிறப்பாகப் பங்கேற்றனர்.
இப்பண்டிகை நாட்டில் உள்ள இந்தியர்களின் கலாச்சாரம் சார்ந்த புரிதலை அதிகரிப்பதோடு, பல்லின மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் வளர்க்க உதவுகிறது என லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்த பொங்கல் பண்டிகையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் ஃபஹ்மி ஃபட்சில் இதனைத் தெரிவித்தார்.
இது போன்ற கொண்டாட்டங்கள் வழி மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைவதாக தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
”இந்நிகழ்வில் தமிழர்கள் மட்டும் இல்லாமல். பிற இனத்தவர்களும் சேர்ந்து சிறப்பாக பொங்கல் வைத்தனர். இந்தப் பொங்கல் நிகழ்ச்சி, இனிவரும் காலங்களிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு கண்ணைக் கவரும் இந்தியர்களின் பாரம்பரிய நடனங்கள், சிலம்பாட்டம், பொங்கல் வைக்கும் போட்டி என பல நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்தியர்களின் தனித்துவத்தையும், மக்களின் ஒற்றுமையையும் வலுப்படுத்த உதவுகிறது