
கோலாலம்பூர் ஜன 21-
நாளை புதன்கிழமை தொடங்கி முதல் கட்ட எஸ்டிஆர் எனப்படும் ரஹ்மா உதவித் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சகம் இன்று அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
இந்த முதல் கட்ட ரஹ்மா உதவித் தொகை திட்டத்திற்கு அரசாங்கம் 2.3 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ள நிலையில் இம்முறை 83 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.இந்தத் தொகை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2.1 பில்லியன் ரிங்கிட்டை விட அதிகமாகும்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க ரஹ்மா உதவித் தொகை திட்டத்திற்கு அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கு 3,700 ரிங்கிட் வழங்கப்பட்டது. அந்தத் தொகையை இவ்வாண்டு அரசாங்கம் 25 சதவீதம் உயர்வு கண்டு RM4,600 ஆக உயர்ந்துள்ளது.
திருமணம் ஆகாதவர்களுக்கு கடந்த ஆண்டு 500 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு அந்த தொகை 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தகுதிப் பெற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் செலுத்தப்படும். புதிய விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ ரஹ்மா உதவித் தொகைக்கான தளத்தில் மூலம் ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது.
பெர்னாமா