தனது தந்தை அடைக்கன் வழங்கிய நிலத்தை மீட்க தெமர்லோ உயர் நீதிமன்றத்தில் 91 வயது மூதாட்டி சந்திரமதி தொடுத்த வழக்கு இன்று தெமர்லோ உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ரவூப் மாவட்ட நில இலாகா எடுத்துக் கொண்ட இந்த நிலத்தை மீட்க இவர் 50 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
மூதாட்டி சந்திரமதி சார்பில் பிரபல வழக்கறிஞர் ஆர் கங்காதரன் வாதாடி வருகிறார்.
நாடே எதிர்பார்க்கும் ஒரு வழக்காக சந்திரமதி வழக்கு மாறியுள்ளது.