மலேசியா திருநாட்டில் தாய் கோவில் என்று வர்ணிக்கப்படும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நவராத்திரி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் மற்றும் வியாபாரிகள் உபய நாட்டாமை டத்தோ சிவகுமார் கண்ணா தலைமையில் ஏழாம் நாள் நவராத்திரி விழா நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் மற்றும் நகரவாழ் மக்கள் உபய நாட்டாமை டத்தோ பி. அழகன் தலைமையில் எட்டாம் நாள் நவராத்திரி விழா நடைபெற்றது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தம்பதியர் உட்பட அறங்காவலர்கள் உபய பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.