ஈப்போ மெங்களம்பூ லாகாட் வட்டாரத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் 25,000 வெள்ளி மானியம் வழங்கி பேர் உதவி புரிந்துள்ளார்.
மழை காலங்களில் நீரோட்டத்தால் இந்த ஆலயத்தில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
இடிந்து விடும் அபாயத்தில் ஆலயத்தின் பின்பகுதி உள்ளது.
இதனை மறு சீரமைக்க பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் 25,000 வெள்ளி வழங்கி உதவி புரிந்துள்ளார்.
ஆலயத்திற்கு நேரடி வருகை புரிந்த சிவக்குமார் இதற்கான காசோலையை ஆலயத் தலைவர் தம்பி ராஜா கணேசனிடம் நேரடியாக ஒப்படைத்தார்.