பினாங்கு பத்து ஊபான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புக்கிட் ஜெம்புலில் தனது தாயாருடன் நோர் பைசால் வசித்து வருகிறார்.
முன்னாள் உடல் கட்டழகர் போட்டியில் பங்கேற்று வெற்றிகளை பெற்று வந்த இவர் நரம்பு தளர்ச்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
தற்போது நடக்கும் சக்தியை இழந்திருக்கும் இவருக்கு தேவையான உதவிகளையும் சக்கர நாற்காலியும் வாங்கி கொடுத்து பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் உதவி புரிந்துள்ளார்.
சொக்சோ சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இவருக்கு உதவித்தொகை பெற்று தர முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.