நாட்டில் தலைசிறந்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக சிகாம்பூட் தமிழ்ப்பள்ளி விளங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த வார இறுதியில் இந்த பள்ளியில் விளையாட்டுப் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
ஒன் சைன் ரைஸ் சிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ரங்கநாதன் ரமேஷ் போட்டியை அதிகரிப்பூர்வமாக தொடக்கி வைத்து ஆதரவு வழங்கினார்.
இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை தட்டி சென்றனர்.
இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முழு ஆதரவு வழங்கிய டத்தோ ரமேஷுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வா நன்றியை தெரிவித்துக் கொண்டார்.