சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹரப்பான் அரசு மாநிலத்தில் உள்ள வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணத்தை வழங்கி வருகிறது.
ஒரு மாணவருக்கு 300 வெள்ளி என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.
அந்த வகையில் சுங்கை ரெங்கம் தமிழ்ப்ள்ளியை சேர்ந்த 80 மாணவர்கள், நோர்த் ஹம்மோக் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்கள், சரஸ்வதி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த 43 மாணவர்கள், ஆர்ஆர்ஐ சுங்கை பூலோ தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 42 மாணவர்கள் மற்றும் எப்பிங்ஹாம் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 36 மாணவர்களுக்கும் தலா 300 வெள்ளி வழங்கப்பட்டது.
ஐந்து தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 261 மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் சார்பில் அவரின் அரசியல் செயலாளர் செகு ஆனந்த் மற்றும் கிராமத் தலைவர் சமூக சேவகி டாக்டர் தேவி ஆகியோர் நிதியை எடுத்து வழங்கி உதவி புரிந்தனர்.