
இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று கெஅடிலான் தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி எதிர்பார்க்கிறார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டியது மலேசியர்களின் கடமையாகும்.
இந்த நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி 60 லட்சம் வாக்காளர்களிடம் உள்ளது.
முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் ஊழலுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.