
நவராத்திரியை முன்னிட்டு
செந்தூல் தண்டாயுதபாணி கோவிலில் தேவி
திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது
நவராத்திரி விஜயதசமியை முன்னிட்டு செந்தூல் தண்டாயுதபாணி கோவிலில் தேவி திருக்கல்யாணம் வைபவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் டாக்டர் தேவிகா தலைமையிலான குழுவினர் கடந்த ஒன்பது தினங்களாக நவராத்திரி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
அந்த வகையில் நேற்றிரவு விஜயதசமியன்று ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

சி.ஐ.எம்.பி. வங்கி இந்து ஊழியர்கள் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்டெர்ட் வங்கி இந்து ஊழியர்கள் ஆகியோர் கூட்டாக இந்த வைபவத்தை ஏற்பாடு செய்தனர்.
சிதம்பரம் கலா குடும்பத்தினர் அன்னதானம் வழங்கிய வேளையில் இந்த திருக்கல்யாணத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.