வரும் 2023ஆம் ஆண்டில் தான் சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நேற்றிரவு நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபயம் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
இந்த மூன்று மாநிலங்களில் அடுத்த ஆண்டில்தான் சட்டமன்றம் கலைக்கப்படும் என்று அவர் சொன்னார்.