
மலேசியா திராவிடர் கழகம் சுங்கை சிப்புட் கிளை ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தோட்டத் தொழிலாளர்களின் உரிமை காக்கப்படுகிறதா? ஆய்வரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ். கேசவன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் டத்தோ சங்கரன் மற்றும் தோட்டத் தொழிலாளர் ஆஊரவு குழு தோழர் பரமேஸ்வரி ஆகியோர் இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்கிறார்கள்.