சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் தனது சிரம்பான் நாடாளுமன்றத்திற்குட்பட்ட இந்தியர் இயக்கங்கள் மற்றும் ஆலயங்களுக்கு நேற்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியை மானியமாக வழங்கினார்.
கூடிய விரைவில் நடைப்பெறவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சில நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நெகிரி செம்பிலான் மாநில KTM பிரதர்ஸ் வாடகை வாகன ஓட்டுனர்கள் நல சங்கத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி, சிரம்பான் வட்டார டெக்சி வாடகை வாகன மற்றும் லீமோசின் நடத்துனர்கள் சங்கத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி மற்றும் சிரம்பான் மாநகர மன்ற இந்து தொழிலாளர்கள் சங்த்திற்கு 10 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
அலுவலக சீரமைப்புக்கு மலேசிய திராவிடர் கழகம் மந்தின் வட்டாரத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
டூசுன் ஞோர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 50 ஆயிரம் வெள்ளி,
பாத்தாங் பெனார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் வெள்ளி மற்றும்
பண்டார் பாரு நீலாய் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ.அருள்குமார் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோருடன் இணைந்து அந்தோணி லோக் இந்த மானியங்களை நேரடியாக வழங்கினார்.