பினாங்கு மாநிலத்தில் குற்றச் செயல் தடுப்பு வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ க. புலேந்திரன் – டத்தின் ஸ்ரீ கமலேஷ் தம்பதியரின் புதல்வர் குமரன் கணேஷ் வணிக நிர்வாகம் மற்றும் நிதி துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து வணிகத்துறையில் பிஎச்டி படிப்பை தொடர அவர் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னர் வணிக நிதி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
பினாங்கு பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் பெட்டாலிங் ஜெயா டைய்லர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.