பினாங்கு மாநிலத்தில் புக்கிட் தெங்கா
Alma ரப்பர் தோட்டத்தில் பல ஆண்டுகளாக அருல் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ ஜட முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்சனைக்கு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி நல்ல முறையில் தீர்வு கண்டிருக்கிறார்.
அல்மா தோட்ட நிறுவனத்தின் பிரதிநிதி Loh Chee Chung மற்றும் புக்கிட் தெங்கா Alma மங்களநாயகி அம்மன் கோயில் குழுவின் தலைவர் அரிகிருஷ்ணன் ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் டாக்டர் இராமசாமியை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
Alma தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினை குறித்து இந்த பேச்சு வார்த்தையில் விவாதிக்கப்பட்டது.
இறுதியாக இந்த ஆலயத்தின் நில இடமாற்றம் குறித்து
சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.