தீபாவளி திருநாளை முன்னிட்டு லேபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை தீபாவளி நட்சத்திர கலைவிழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
நாளைய விழாவில் 300 வசதி குறைந்த மக்களுக்கு பொருள் உதவிகள் வழங்கப்படுவதாக லேபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.
மலேசியா கலைஞர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான பாடகர் செந்தில் குமார், பாடகி மாலதி ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.
மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன், கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ சஹிடான் காசிம், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா உடபட பல பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிகிறார்கள் என்று அவர் சொன்னார்.