மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது.
ரெயில் சென்றபோது, குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக வந்துள்ளன. எருமை மாடுகள் மீது ரெயில் மோதியது. இதையடுத்து டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
. எருமை மாடுகள் மீது மோதியதில் ரெயில் எஞ்சினின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. ரெயில் மோதியதில் 4 எருமை மாடுகள் பலியாகியிருக்கலாம் என தெரிகிறது.