கடந்த ஒன்பது தினங்களாக உலகில் உள்ள அம்மன் ஆலயங்களில் நவராத்திரி விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
மலேசிய திருநாட்டிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில்
பினாங்கு இந்து தர்ம மாமன்ற ஏற்பாட்டில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாறுவேட போட்டியில் பங்கேற்ற குழந்தைகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினர்.
இந்த விழாவில் மாறுவேட போட்டியில் பங்கேற்ற குழந்தைகளை
கண்டதில் பெரும் மிக்க மகிழ்ச்சி கிட்டியதாக பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி தெரிவித்தார்.
இதுபோன்ற நிகழ்வுகளின் வழி, நமது அடயாளம் இந்நாட்டில் வருங்காலத்தில் தொடர்ந்து நிலைநாட்டலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என்று அவர் சொன்னார்.