வணிகர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் செர்டாங்கிலுள்ள வீடொன்றில் நேற்று கைது செய்தனர்.
ஆடவர் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் படத்தையும் கொலை மிரட்டலையும் வாட்ஸ் ஆப் வாயிலாக விடுத்ததாக கார் விற்பனையாளர் செய்த புகாரைத் தொடர்ந்து 41 வயதுடைய அந்தே சந்தேகப் பேர்வழி தடுத்து வைக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.அன்பழகன் கூறினார்.
செர்டாங் வட்டாரத்தில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியிருக்கும் வணிகர்களிடம் பாதுகாப்பு பணம் கோரி மிரட்டும் நடவடிக்கையில் அந்த ஆடவர் ஈடுபட்டு வந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.