
ஆப்பிரிக்க மண்டலத்தில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் இறப்புக்கு காரணமான நான்கு இருமல் மற்றும் காய்ச்சல் மருந்து பொருட்கள் மலேசியாவில் பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்
அனைத்து தயாரிப்புகளும் Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகும்.
எவ்வாறாயினும், இந்த நாட்டில் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக, தேசிய மருந்து ஒழுங்குமுறைப் பிரிவு (NPRA) மூலம் சுகாதார அமைச்சு (கேகேஎம்) இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்காணிக்கும் என்றார்.