மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் 32 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் தாமோக் மாவட்டம், தாமோக் ரயில் நிலையத்திற்கு ரிவான்ஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் ஷரப், சித்தார்த் குஷ்வாகா என்ற இரு எம்.எல்.க்கள் ஏறினர். இருவரும் மது அருந்தியிருந்ததால் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.