வரும் 15 ஆவது பொதுத் தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளராக மலேசியர்கள் தங்களை முன்மொழிய அனுமதிக்கும் ஒரு புதிய வலைத்தளத்தை கெஅடிலான் தேசிய துணை தலைவர் ரஃபிஸி ரம்லி வெளியிட்டுள்ளார்.
இந்த முயற்சி கெஅடிலான் அதன் திறமையை விரிவுபடுத்த உதவும்.
ஆர்வமுள்ளவர்கள் calonkeadilan.org இல் பதிவு செய்யலாம்.
நேற்று தொடங்கப்பட்ட இந்த இணையதளம் வரும் வியாழக்கிழமை அக்டோபர் 13 ஆம் தேதி வரை இயங்கலையில் இருக்கும் என்று அவர் சொன்னார்.