
இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சவுக்கு எதிராகவும் விசாரணையை முன்னெடுக்க இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தவிர்த்து முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.