
1mdb -க்கு சொந்தமான கோடிக்கணக்கான வெள்ளியை கொள்ளையடித்து தப்பியோடிய ஜோ லோ இண்டர்போல் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுவதை புக்கிட் அமான் போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி தெரிவித்தார்..
ஜோ லோ இன்னமும் தேடப்படும் ஒரு குற்றவாளி ஆவார்.
@theborneoghost என்ற ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியில்
ஜோ லோ இண்டர்போல் சிவப்பு பட்டியலில் இருந்து விடுபட்டிருப்பதாக கூறி இருப்பது சுத்த பொய் என்றார்.
பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பொறுப்பற்ற போலிச் செய்திகள் தொடர்பில் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் எச்சரித்தார்.