
ஒவ்வொரு ஆண்டும் மலேசியர்கள் மித மிஞ்சிய உணவுகளை கண்மூடித்தனமாக குப்பைத் தொட்டியில் கொட்டுகின்றனர் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
இதன் எடை 4,081 டன் என அச்சங்கத்தின் தலைவர் மற்றும் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
மீண்டும் சாப்பிடக்கூடிய இந்த உணவு சுமார் 12 மில்லியன் மக்கள் மூன்று வேளைக்கும் சாப்பிடக்கூடியதாகும்.
ஆகவே மலேசியர்கள் இன்றுவரை உணவுக்கு மதிப்பு கொடுக்காமல் மீத முள்ள உணவை மிக அலட்சியமாக தூக்கி எறிகிறார்கள்
.
உணவு இறைவனுக்கு சமம்.
உலகத்தில் ஒரு வேளை உணவு கிடைக்காமல், தினந்தோறும் 25,000 பேர் மரணம் அடைகின்றனர்.
10 வினாடிக்குள் ஒரு குழந்தை பட்டினியால் இறக்கின்றது.
9 மில்லியன் மக்கள் பசியின் தொடர்பான நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் மரண அடைகின்றனர்
ஆகவே மலேசியர்கள், பசியின் கொடுமையை எதிர்நோக்கவில்லை.
உணவை இன்னும் மதிக்க கற்றுக்கொள்ளவில்லை என்றார் அவர்.
இதனை கருத்தில் கொண்டு பினாங்கு பயனீட்டாளர் சங்கம், மீத முள்ள உணவை எப்படி ஒரு புதிய உணவாக தயாரிப்பது என்பது பற்றிய ஒரு செயல் விளக்க நிகழ்ச்சியை தனது அலுவலகத்தில் நடத்தியதாக அதன் எற்பாட்டாளர் என் வி சுப்பாராவ் தெரிவித்தார்