
அக்டோபர் 12 வரை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள உயர் அலையின் நிகழ்வைத் தொடர்ந்து கிள்ளான் குடியிருப்பாளர்கள் தயாராக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
அதிகபட்சமாக 5.5 மீட்டர் வரை உயரும் அலையை எதிர்கொள்ளும் வகையில் உதவி தொடர்பு எண்ணை வைத்திருக்கும்படி சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மக்களுக்கு அறிவுறுத்தினார்.
“அக்டோபர் 12 வரை நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையின் போது அவசர காலங்களில் முக்கியமான எண்களை (கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி) வைத்திருக்கும் கிள்ளான் குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.