பொது தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம் என்று ஆணித்தரமாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு அம்னோ உச்சமன்ற கூட்டம் நடைபெறுகிறது.