பக்கத்தான் ஹரப்பான் மாநாடு வரும் அக்டோபர் 29 ஆம் தேதி ஈப்போ ஐஐசிசி மண்டபத்தில் நடைபெறும் என்று பேராக் பக்கத்தான் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் ரவா தெரிவித்தார்.
ஒரு நாள் மாநாட்டில் ஹரப்பானின் பல முக்கிய தலைவர்கள் உட்பட,
கெஅடிலான் மக்கள் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட சுமார் 5,000 பேர் பங்கேற்பார்கள்.
“ஹரப்பான் பிரதமர் வேட்பாளர், நாடு முழுவதும் ஹரப்பானின் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, கொள்கை பாடல் மற்றும் 15ஆவது பொதுதேர்தலில் பயன்படுத்தப்படும் சின்னம் ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் மாநாட்டின் மூலம் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.