தீபாவளி பண்டிகை நேரத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க அம்னோவுடன் ம இகா கை கோர்த்தது ஏன்?

வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி இந்து பெருமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருக்கும் நேரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இந்திய சமூகத்தின் போராளிகள் என்று அடிக்கடி முழக்கம்
ம இகா இப்போது அதிகார பேராசை கொண்ட அம்னோவுடன் கை கோர்த்து நாடாளுமன்றத்தை கலைக்க துணை போனது ஏன் என்று கோலசிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் தீபன் சுப்பிரமணியம் கேள்வியை எழுப்பியுள்ளார்.

அம்னோவின் விருப்பத்திற்கு
ம இகா துணை போனது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மலேசியா குடும்பம் என்று கூறிக் கொள்ளும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தீபாவளி பண்டிகையை நேரத்தில் நாடாளுமன்றத்தை கலைத்தது ஏன்.

இந்த அரசாங்கம் இந்திர்களின் உணர்வுகளுக்கு அறவே மதிப்பு அளிக்கவில்லை.

இதற்கு ம இகா துணை போனது பெருத்த வேதனையாகும்.

இந்தியர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் தீபாவளி பண்டிகை நேரத்தில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு
ம இகா துணிந்து எதிர்ப்பு குரல் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் மஇகா அப்படி செய்யவில்லை. பேரரசை பிடித்த அம்னோவுக்கு துணை போகியுள்ளது என்று தீபன் சுப்பிரமணியம் சாடியுள்ளார்.

விரைவில் நடக்கும் பொது தேர்தலில் அம்னோ மற்றும்
ம இகாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles