மலேசியா யோக மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த வார இறுதியில் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் அணித்துலக யோகா போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மலேசிய யோகா சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் லிங்கம் பிள்ளை தலைமையில் இந்த போட்டி நடைபெற்றது.
போட்டியை காண சிறப்பு சிறப்பு வருகை புரிந்த மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.
அனைத்துலக அளவில் இன்று யோகா மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் யோகா பயிற்சியை அதிகமானோர் கற்று வருவது பாராட்டுக்குரியது என்று பின் ரெட்டி தெரிவித்தார்.