2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஜூனியர் கிண்ணக் கால்பந்து போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட மலேசியா ஜூனியர் கால்பந்து குழு அபார வெற்றி பெற்றுள்ளது.
பி பிரிவில் இடம் பெற்ற மலேசியா ஜூனியர் கால்பந்து குழு தொடக்க ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனத்தை வீழ்த்தியது என்று குழு நிர்வாகி கிறிஸ்டோபர் ராஜ் தெரிவித்தார்.
பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு சிற்றரசு, 3 ஆவது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாம் நாட்டு அணியுடன் டிரா கண்டது.
மிக முக்கியமான மூன்றாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தோனேசியா அணியை அதன் சொந்த அரங்கிலேயே 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியா வீழ்த்தியது.
ஆசியா ஜூனியர் கிண்ணக் கால்பந்து போட்டியில் மலேசியா குழுவுக்கு இது மிகப் பெரிய வரலாற்று வெற்றி என்று நிர்வாகி கிறிஸ்டோபர் ராஜ் குறிப்பிட்டார்.
இந்த வெற்றிகள் மூலம் பி பிரிவில் முதல் இடத்தை பிடித்த மலேசிய குழு இறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆசியாவின் ஜாம்பவான்கள் என்று வர்ணிக்கப்படும் ஈரான், ஜப்பான் தென் கொரியா ஆகிய குழுக்களை சந்திக்கும் மலேசியா வெற்றி பெற போராடும் என்றார் அவர்.