நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் மீண்டும் சிரம்பான் நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவரின் வெற்றியை உறுதி செய்ய நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அருள்குமார் தலைமையில் நீலாய் பட்டணத்தில் தேர்தல் நடவடிக்கை அறை நேற்று அமைக்கப்பட்டது.
சிரம்பான் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு நீலாய் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நாடாளுமன்ற தொகுதிகளில் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற இப்போதே தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.