
தேசிய முன்னணி மற்றும் அம்னோ மீது மக்கள் கடுமையாக குறை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில்
அரசாங்கத்தை தற்காத்துக் கொள்ள முடியாமால் கட்டாயமாக நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதற்கு என்னையும் பெரிக்காத்தான் நேசனல் அமைச்சர்களையும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி குறைகூறுவது அவரின் பொறுப்பற்ற போக்கை காட்டுகிறது என்று டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கடுமையாக சாடியுள்ளார்.
பருவமழை காலத்தில் பொதுத் தேர்தலை நடத்தும் தேசிய முன்னணி மற்றும் அம்னோவை பொதுமக்கள் கடுமையாக சாடி வரூகிறார்கள்.
ஆனால் இப்போது நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு
எங்கள் மீது இஸ்மாயில் சப்ரி குற்றஞ்சாட்டுகிறார்.
அவர்கள் வேறு எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது.
இதற்கு அவர்கள்தான் இதற்கு பொறுப்பு வகிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதை தாமதப்படுத்தும்படி பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் 12 அமைச்சர்கள் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு கடிதம் எழுதியது தொடர்பில் நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறியிருந்தார்.